10 வயது குறைவானவர் உடன் காதலில் விழுந்தது ஏன்? பிரியங்கா சோப்ரா விளக்கம்!!

270

பிரியங்கா சோப்ரா

தன்னை விட பத்து வயது குறைவான நிக் ஜோனஸ் உடன் காதலில் விழுந்தது ஏன் என நடிகை பிரியங்கா சோப்ரா விளக்கமளித்துள்ளார். பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸிற்கும் திருமண நிகழ்ச்சி, நவம்பர் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை ஜோத்பூர் அரண்மனையில் நடைபெறுகிறது.

திருமணத்திற்கு பிரத்யேகமான பல கோடி மதிப்புள்ள வைர மாலை, மோதிரம் ஆகியவற்றை பிரியங்கா சோப்ரா வாங்கியுள்ளார். மேலும் திருமணத்திற்காக வாங்கிய ஆடைகளும் மிகுந்த பொருட்செலவானதாகும்.

இந்நிலையில், பத்து வயது குறைவான நிக் ஜோனஸுடன் காதலில் விழுந்தது குறித்து பிரியங்கா சோப்ரா கூறுகையில், எந்த ஒரு உறவாக இருந்தாலும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். இது தான் நிக் மற்றும் எனக்கு இடையே காதல் வலுப்பெற்றதற்கான முக்கிய காரணம்.

காபி போட்டு கொடுப்பது மரியாதை அல்ல. மாறாக நம்முடைய கடின உழைப்பை பாராட்டுபவராக இருக்க வேண்டும். ஆணின் வேலை போன்றே பெண்ணுக்கும் அவரின் வேலை முக்கியமானது என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.

அவர் முடிவுகள் எடுக்கும்போது நம்மிடமும் கருத்து கேட்க வேண்டும், அதுதான் மரியாதை என தெரிவித்துள்ளார். திருமணத்தை முன்னிட்டு பிரியங்காவின் தோழிகள் சேர்ந்து நியூயார்க் நகரில் அவருக்கு பார்ட்டி கொடுத்தனர்.

அந்நிகழ்ச்சிக்கு பிரியங்கா அணிந்து வந்திருந்த உடை அனைவரையும் கவர்ந்தது மற்றும் பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.