வைரமுத்துவின் ஆசைக்கு இணைங்காததால் வாய்ப்பினை தடுத்தார் : பாடகி புவனா அதிரடி!!

498

பாடகி புவனா சேஷன்

வைரமுத்து மீது மட்டும் பாலியல் புகார் அளித்ததற்கான காரணம் குறித்து பாடகி புவனா சேஷன் கூறியுள்ளார். பாடகி புவனா சேஷன் என்பவரும் தன்னை வைரமுத்து தவறாக அழைத்தார் என்று #MeToo வில் பாலியல் புகார் கூறி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அது குறித்து புவனா அளித்துள்ள விளக்கத்தில், இன்னும் சிலரும் இப்படி பெண்களை படுக்கைக்கு அழைக்கத்தான் செய்கின்றனர். அனால் அதில் பெரும்பாலானோர் படுக்க மறுத்ததும் அமைதியாக சென்றுவிடுவார்கள்.

ஆனால் நான் வைரமுத்து மீது மட்டும் குற்றம்சொல்ல காரணம் அவர் மட்டும்தான் நான் அவரின் ஆசைக்கு இணங்காததால் எனக்கு வந்த அத்தனை பாடல் பாடும் வாய்ப்பையும் தொடர்ந்து பலவழிகளில் தடுத்தார்.

எனது மகன் எனக்கு அளித்த நம்பிக்கையை தொடர்ந்தே நான் இதனை வெளியில் கூறியுள்ளேன், இதுபோன்று பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்தவற்றை சொல்ல முன்வரவேண்டும் என கூறியுள்ளார்.