பூட்டிய காருக்குள் ஒரு மணி நேரம் தவித்த பச்சிளம் குழந்தை : பெற்றோர் செய்த செயல்!!

118

பெற்றோர் செய்த செயல்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பூட்டிய காருக்குள் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை பெற்றோரை காணாமல் தவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீருட்டில் நொவ்சாண்டி சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து ஒரு குழந்தையின் அழுக்குரல் கேட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சுற்றி இருந்த பொது மக்கள் அந்த காரின் அருகாமையில் கூடி விட்டனர். இருப்பினும் பெற்றோர் வர தாமதமானதால் காவல்துறையினருக்கு பொது மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கார் கண்ணாடியை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்டதும் சோர்வாக காணப்பட்ட குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னரே காரை நிறுத்தி இருந்த இடத்திற்கு பெற்றோர் திரும்பினர். அங்கிருந்த கூட்டத்தை கண்டதும் தாயார் நழுவி விட குழந்தையை மீட்ட தந்தையை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்