அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்… அழைப்பிதழின் செலவு மட்டும் இத்தனை கோடியா?

240

திருமண அழைப்பிதழ்

தொழிலதிபர் அம்பானியின் மகளின் திருமண அழைப்பிதழ் செலவு குறித்த விபரம் வெளியாகி கேட்பவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரனான தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஊரே வியக்கும்படி மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது.

இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை காதலித்து வந்தார். ஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல் மிகப்பெரிய தொழிலதிபர். நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தை உருவாக்கியவர்.

இந்நிலையில் இருவரின் காதல் விவகாரமும் வீட்டிற்கு தெரிந்து அவர்கள், பச்சை கொடி காட்டியனர். அதனைத்தொடர்ந்து, இத்தாலியில் உள்ள லேக் கோமோ என்ற பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தொடர்ந்து 3 நாட்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்திற்கு மட்டும் கோடி கணக்கில் செலவானதாக கூறப்பட்டது. ராஜா, ராணிக்கு சொர்க்கத்தில் திருமணம் நடக்கும். 50 வகையான உணவுகள் பரிமாறப்படும் பல வகையான பூக்களால் மழை பெய்யும் என்று கதைகளில் கூறப்படும் அனைத்தும் இஷா அம்பானியின் நிச்சயதார்த்த விழாவில் அரங்கேறியது.

இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இஷா- ஆன்ந்த் திருமணத்திற்கான அழைப்பிதழ் வேலைகள் முடிந்து விட்டன. திருமணப் அழைப்பிதழை வைத்து வழிபடுவதற்காக குடும்பத்தினருடன் அம்பானி கேதார்நாத் கோயிலுக்கும் சென்றார்.

அக்டோபர் 29ஆம் திகதி குடும்பத்தினருடன் சென்ற அம்பானி சுமார் 20 நிமிடங்கள் அங்கு பூஜைகள் செய்துவிட்டு, ஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.

இஷா – ஆன்ந்த திருமணம் அழைப்பிதழ் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தங்கத்திலேயே அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த திருமண அழைப்பிதழ் ஒன்றின் செலவு மட்டுமே 1 லட்சத்திற்கும் மேல் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.