காதல் மனைவியின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த கணவன் : எடுத்த விபரீத முடிவு!!

167

விபரீத முடிவு

தமிழகத்தில் கணவருடன் சண்டை போட்டு கொண்டு காதல் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெட்பினோ ராஜ் (36). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து ராஜின் மனைவி தனது மகனை அழைத்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். காதல் மனைவி பிரிந்து சென்றால் அதிர்ச்சியடைந்த ராஜ் பின்பு மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்ற அவரை காலையில் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை தேடினர். அப்போது, வீட்டின் பின் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ராஜின் பிணம் தூக்கில் தொங்கி கொண்டிருந்தது. மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் ராஜின் சடலத்தை கைப்பற்றிவிட்டு அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.