மனைவியின் தங்கைக்கு தொடர் வற்புறுத்தல் கொடுத்த பொலிஸ் 2வது முறையாக கைது!!

188

பொலிஸ்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மனைவியின் தங்கையை 2வது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த சப் இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் ( 43) – அயனப்பிரியா (38) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வெங்கடாசலம் கோபி மதுவிலக்கு பொலிஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அயணப்ரியாவின் சித்தப்பா மகள் திவ்யபாரதி (23) கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட வெங்கடாசலம், கடந்த ஜூன் 13-ந் தேதி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட அயணப்ரியா, தேவனம்பட்டி சோதனை சாவடி அருகே வண்டியை நிறுத்தி பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், துறை ரீதியிலான நடவடிக்கையாக அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த வெங்கடாசலம், மீண்டும் 2வது திருமணம் செய்துகொள்ள முயற்சிப்பதாக திவ்யபாரதி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், ‘வெங்கடாசலம் ஜாமீனில் வெளியே வந்த நாளில் இருந்து என் புகைப்படத்தை முகநூலில் போட்டு, என்னை திருமணம் செய்துகொண்டேன்” என்று பதிவிடுவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் வெங்கடாசலத்தை இரண்டாவது முறையாக மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.