ஆளில்லாத நேரம் சிறுமியின் கைகளை கட்டி அத்துமீறிய கொடூரன்!!

160

அத்துமீறிய கொடூரன்

சென்னை புளியந்தோப்பு பகுதியில், ஆளில்லாத நேரம் பார்த்து 14 வயது சிறுமியின் கைகளை கட்டி, ஆட்டோ ஓட்டுநர் துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜி தாமஸ் (26), நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், யானை கவுனி சாலை பகுதியில் உள்ள பெட்டில் திடீரென புகுந்துள்ளார். அங்கு தனியாக இருந்த 14 வயது சிறுமியின் கைகளை கட்டி துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த சிறுமி, உதவி கேட்டு அலற ஆரம்பித்துள்ளார். உடனே விஜி, சிறுமியின் வாயில் சோப்பு ஆயிலை எடுத்து ஊற்ற ஆரம்பித்துள்ளார்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு பொதுமக்களும் வீட்டை நோக்கி விரைய ஆரம்பித்தனர். பதற்றத்தில் விஜியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். வீட்டிற்குள் சென்றபோது சிறுமியின் கைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்தனர்.