15 வயது தங்கையை சீரழித்த 19 வயது அண்ணன் : புகார் செய்த தந்தை!!

236

தங்கையை சீரழித்த அண்ணன்

குஜராத் மாநிலத்தில் 15 வயது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த 19 அண்ணன் மீது அவரது தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார். தீபாவளியன்று குடிபோதையில் இருந்த அண்ணன், தூங்கிகொண்டிருந்த தனது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை பொலிசில் அளித்துள்ள புகாரில், நானும் எனது மகனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினோம். நான் அன்று மிகவும் அதிகமாக மது அருந்திவிட்டதால் எனது தனி அறையில் தூங்கி விட்டேன். அதன் பின் என்னுடன் மது அருந்திய எனது மகன் தனியாக தூங்கிக்கொண்டிருந்த கடைசி மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான்.

இந்த சம்பவத்தை அடுத்த நாள் காலை மகள் என்னிடம் சொன்னாள் என தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பொலிசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் அண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.