உருக்குலைந்து கிடந்த அவளை பார்த்த அந்த நொடியில் : இப்படியும் ஒரு காதல் : படித்துப்பாருங்கள்!!

1067

இப்படியும் ஒரு காதல்

பள்ளிக்காலத்தில் ஆசையாக காதலித்த பெண்ணை காலங்கள் கடந்து அவள் விபத்தில் சிக்கி உருக்குலைந்தபோதும், அவள் மீது கொண்ட உண்மையான காதலால் அவளையே திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெயப்பிரகாஷ். 2004 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பள்ளியில் ஜெயப்பிரகாஷ்ம் – சுனிதாவும் ஒன்றாக படித்துள்ளனர்.

சுனிதா பார்ப்பதற்கு பேரழகியாக இருந்ததால் முதல் பார்வையிலேயே தீபக்கின் மனதை கவர்ந்துவிட்டார். பள்ளிக்காலத்தில் விதிமுறைகள் அதிகம் என்பதால் சுனிதாவிடம் அதிகமாக ஜெயப்பிரகாஷ் பேசவில்லை. இருவரும் ஒருவரையொருவர் கண்களால் பேசிக்கொண்டனரே தவிர, நேரில் பேசிக்கொண்டதே கிடையாது. ஒரு வழியாக இருவரும் பள்ளி இறுதியாண்டை நிறைவு செய்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் பிரிந்துசென்றனர்.

அன்று பிரிந்த அவர்கள் அதன்பின்னர் சந்தித்துக்கொள்ளவில்லை, இருப்பினும் இருவருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருந்தது. பள்ளி படிப்பை முடித்து இருவரும் கல்லூரியில் அடியெடுத்து வைத்தனர். சுமார், 3 வருடங்கள் கழித்து 2007 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் பிறந்த நாள் வந்துள்ளது. மறுமுனையில் பேசியது சுனிதா.

காலங்கள் கடந்தும், நம்முடைய பிறந்தநாளை ஞாபகம் வைத்திருக்கிறாளே என எண்ணி வியந்துள்ளார் ஜெயப்பிரகாஷ். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவிட்டு, குறைந்த நிமிடங்கள் மட்டுமே சுனிதா பேசியுள்ளார். ஆனால் வாழ்நாளுக்கும் மறக்காத தருணமாக அமைந்துவிட்டது. அதன் பிறகு அவ்வப்போது பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

2011 ஆம் ஆண்டு நவம்பரில் நண்பன் ஒருவன் சுனிதாவிற்கு விபத்து ஏற்பட்டு கோவையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஜெயப்பிரகாஷிடம் கூறியுள்ளான்.

அடித்து பிடித்து மருத்துவமனைக்குச் சென்று, ஜெயப்பிரகாஷ் பார்த்தபோது சுனிதா, முகம் சிதைந்து, தலையில் முடியில்லாமல் மூக்கு இல்லாமல், வாய் கிழிந்து பற்கள் இல்லாது கிடந்துள்ளாள்.

90 வயதைத் தாண்டிய பாட்டியைப் போல அவளது நடை இருந்தது. இருவர் கைதாங்கலாக பிடித்திருந்தார்கள். அதிர்ந்தே விட்டேன். உருக்குலைந்து கிடந்த சுனிதாவை பார்த்த அந்த நொடியில் தான் நான் முடிவு செய்தேன் இனி அவளை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று.

ஆம், என்னுடைய முதல் காதலி, என் ஆசை நாயகி அவள். என்னைத் தவிர வேறு யாராலும் அவளை நன்றாக கவனித்துக் கொள்ள முடியாது என்று தோன்றியது. நேராக அவளிடம் சென்று என் காதலைச் சொன்னேன்.

இதனை கேட்டு சுனிதா மட்டுமல்ல எனது பெற்றோரும் அதிர்ந்தனர், ஒரு வழியாக எனது குடும்பத்தாரை சம்மதிக்க வைத்து, 2014 ஆம் ஆண்டு இருவரும் எளிமையாக திருமணம் செய்துகொண்டோம்.

இப்போது அவளைப் பார்த்து, அவளது தன்னம்பிக்கையை பார்த்து பிரம்மிக்கவே செய்கிறேன். என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்ததாய் உணர்கிறேன். அவளால் என்னுடைய வாழ்க்கை அழகாகியிருக்கிறது என்கிறார் ஜெயப்பிரகாஷ் இப்போது, இவர்களின் அழகிய வாழ்க்கைக்கு பரிசாக ஆத்மியா, ஆத்மிக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.