தூக்கத்தில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு நேர்ந்த கதி!!

903

நேர்ந்த கதி

பெண்ணை வன்புணர்வு செய்துவிட்டு தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் வியாதி இருப்பதாகக் கூறி தப்பிக்க முயன்ற நபர், குற்றவாளி என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Ryan Hartman (38) என்னும் நபர் Ottawaவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரை, அவர் தூங்கும்போது வன்புணர்வு செய்தான். குற்றம் செய்தவரும், பாதிக்கப்பட்ட பெண்ணும், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலரும் மது போதையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நடந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண், தன்னை வன்புணர்வு செய்த நபர் நன்கு விழித்து அமர்ந்திருந்ததைக் கண்டபின் பொலிசாரிடம் புகார் செய்ததையடுத்து, பொலிசார் அவனைக் கைது செய்தனர்.

ஆரம்பத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய Ryan என்னும் அந்த நபர், பின்னர் திடீரென ஒரு நாள், சம்பவம் நடந்தது உண்மைதான் என்றும், ஆனால் தனக்கு தூக்கத்தில் பாலுறவு கொள்ளும் வியாதி இருப்பதால் தான் குற்றவாளி அல்ல என்றும் வாதிட்டான்.

வழக்கு தொடர்ந்த நிலையில், மன நல மருத்துவர் ஒருவர் Ryanஐ விசாரித்து அறிக்கை ஒன்றை அளித்தார். ஆனால் அந்த அறிக்கை Ryanக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதை நிரூபிக்க தவறி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, வேறொரு சோஃபாவில் படுத்திருந்த Ryan அந்த இடம் வசதியாக இல்லாததால், தூக்கத்திலிருந்து விழித்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் படுத்திருந்த அதே மெத்தையில் வந்து படுத்ததாகவும் கூறப்பட்டிருந்தது. அப்படியானால் தூக்கத்திலிருந்த எழுந்த, தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ள ஒரு நபரால், உடனடியாக தூங்க இயலாது.

எனவே Ryan, அந்த பெண்ணை சுய நினைவுடனேயே வன்புணர்வு செய்து விட்டு, அவர் விழித்துக் கொண்டதும், தூங்குவதுபோல் நடித்திருக்கிறார் என்று கூறிய நீதிபதி, Ryan நடந்தவை தனக்கு நினைவில்லை என்று கூறுவது வேண்டுமானால் மதுவின் தாக்கத்தால் இருந்திருக்க இயலுமே ஒழிய, தனது வியாதியால் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

எனவே Ryan குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார் Kimberly Moore என்னும் Brockville நீதிபதி. தீர்ப்பை கேட்ட பாதிக்கப்பட்ட பெண், வழக்கு முடிவுக்கு வந்ததை, தன்னால் நம்ப இயலவில்லை என்றும் நீதிபதியின் தீர்ப்பு தனக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.