காதலனை நம்பிச் சென்ற பெண் கர்ப்பமாக திரும்பினார் : நீதிமன்றத்தில் சொன்ன சாட்சியம்!!

1308

காதலனை நம்பிச் சென்ற பெண்

இந்தியாவில் காதலன் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி, அதன் பின் இரண்டு பேரின் சம்மதத்துடனே உறவு வைத்துக் கொண்டதாக அந்த பெண் நீதிமன்றத்தில் கூறியதால், அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை திருப்பி செலுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண், கடந்த 15ம் திகதி காதலித்த நபருடன் வீட்டை விட்டு வெளியேரினார். இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை குறித்த வாலிபர் கடத்திச் சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பொலிசாரும் அந்த பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு அந்த பெண் வீடு திரும்பினர். வீடு திரும்பிய பெண் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

மகாராஷ்டிரா அரசு, மனோ தைர்யா என்ற திட்டத்தின் கீழ் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் ஆசிட் வீச்சு, குடும்ப வன்முறை போன்ற சம்பவங்களிலும் பாதிக்கப்படும் பெண்களுக்கும் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் காதலனால் கர்ப்பமான மைனர் பெண்ணுக்கும் அரசு தரப்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, அந்த பெண் திடீரென தனது காதலனுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார். காதலன் தன்னை பலாத்காரம் செய்யவில்லை என்றும், தாங்கள் இருவரும் விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தாங்கள் இருவரும் தற்போது கணவன், மனைவியாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மனோ தைர்யா திட்டத்தின் கீழ் அரசு வழங்கிய 2 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.