உங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

1901

உள்ளங்கைகளில் இப்படி கோடுகள்

நம் உள்ளங்கைகளில் காணப்படும் ரேகையைக் கொண்டு நம் வாழ்வில் நடக்கும் விஷயங்களை கை ரேகை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்தவகையில் உங்கள் உள்ளங்கைகளில் ரேகையை தவிர நிறைய கோடுகள் காணப்பட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளுவோம்.

அதிக கோடுகள் : உள்ளங்கைகளில் அதிகமான கோடுகள் தென்பட்டால் என்ன நடக்கும் என்பது நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. முக்கியமான விதி ரேகைகளும் சந்திர, சூரிய, சுக்கிர மேடுகளும் அதனுடைய பலன்கள் பற்றி மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறோம்.

உங்கள் உள்ளங்கைகளில் அதிகமான கோடுகள் காணப்படுவது நீங்கள் நிறைய ஆடம்பரமான விஷயங்கள் குறித்து கனவு காண்பீர்கள் என்பதை குறிக்கிறது. இநத சிந்தனை உங்களுக்கு நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உங்களை ஒரு குழப்பவாதியாக வைத்திருக்கும்.

அதிக கிடைமட்ட கோடுகள் : உங்கள் உள்ளங்கைகளில் அதிக கிடைமட்ட கோடுகள் தென்பட்டால் நீங்கள் நிறைய நேரங்களில் விரக்தியை உணர்வீர்கள். உங்களுடைய உணர்வுகளை மற்றவர்கள் மற்றவர்கள் புரிந்து கொள்ளாதிருப்பதை நினைத்து விரக்தியில் இருப்பீர்கள். இதனா‌ல் உங்கள் மனது கூலாக இல்லாமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

அதிக தடை கோடுகள் : உங்களுடைய உள்ளங்கை பார்ப்பதற்கு கடினமாகவும் மற்ற ரேகை களுக்கு குறிக்கீடாக நிறைய தடை கோடுகள் கொண்டும் தென்பட்டால் பணம் தேடுவதில் அவசரமாக இருப்பீர்கள்.

அதிக தடை கோடுகள் மற்றும் மென்மையான உள்ளங்கை : உங்கள் உள்ளங்கை மிகவும் மென்மையாக அதே நேரத்தில் மற்ற ரேகை களுக்கு குறிக்கீடாக நிறைய தடை கோடுகள் கொண்டும் தென்பட்டால் நீங்கள் எளிதில் உணர்ச்சி வசக்கூடிய நபராகவும், ஒரு பொறுப்பற்ற அசாதாரண மனிதராகவும் மற்றவர்களுக்கு தென்படுவீர்கள்.

பொதுக் கருத்து : பெண்களை பொருத்த வரை இந்த நிறைய கோடுகள் சீரற்ற சிந்தனையையும், குழப்பங்களையும் வழங்குகிறது. ஆண்களை பொருத்த வரை குடும்ப மற்றும் சுற்றுவட்டார அழுத்தத்தை கொடுக்கிறது.