திருமணத்திற்கு பணம் இல்லாமல் பெற்றோர் எடுத்த முடிவு : வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

284

தூக்கிட்டு தற்கொலை

வீட்டை அடமானம் வைக்கலாம் என பெற்றோர் எடுத்த முடிவால் மனவேதனை தாங்காமல் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு ராஜதுரை (23) என்ற மகனும், சங்கீதா (21), முத்துலட்சுமி (26) என்ற மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் பட்டதாரி மகளான முத்துலெட்சுமிக்கு, ராஜாமணி மாப்பிள்ளை தேட ஆரம்பித்துள்ளார். ஆனால் வீட்டில் அதற்கேற்ற வசதி இல்லாததால், வீட்டை அடமானம் வைக்கலாம் என மனைவியுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை கேட்ட முத்துலட்சுமி மனவேதனை தாங்காமல் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.