14 வயது சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய 30 வயது நபர் : சிறுமியின் பெற்றோரே உடந்தையாக இருந்தது அம்பலம்!!

129

சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய நபர்

புதுச்சேரியில் சட்டத்தை மீறி 14 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 30 வயது தொழிலாளியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேருநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் 14 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் சிறுமியின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார்.

இதையடுத்து எவ்வித இரக்கமும் இல்லாமல் இல்லாமல் சிறுமியை அவரின் பெற்றோர் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து சிறுமி 3 மாத கர்ப்பமான நிலையில் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் கூலி தொழிலாளி மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.