வாட்ஸ் அப்பில் தூக்கில் தொங்கிய காதலன் : விளையாட்டு என நினைத்த காதலி : நடந்த விபரீதம்!!

241

நடந்த விபரீதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காதலி பேச மறுத்ததால் மனவேதனை அடைந்த காதலன் வாட்சாப்பில் தான் தற்கொலை செய்யப்போவதாக பதிவிட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் நடந்துள்ளது.

புகழேந்தி ராஜா என்பவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த உறவினரின் மகளை காதலித்து வந்தார்.

இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண் கடந்த சில நாட்களாக அவரிடம் பேசவில்லை. காதலி பேச மறுத்ததால் புகழேந்திராஜா மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் தன்னுடைய அண்ணன் முனியசாமியிடம் செல்போனில் பேசுகையில், உலகில் வாழ பிடிக்கவில்லை, எனவே தற்கொலை செய்து கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து முனியசாமி, பெருநாழி பொலிஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில் விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரம் காட்டு பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் புகழேந்திராஜா தூக்கில் பிணமாக தொங்குவதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது செல்போனை பொலிசார் பார்த்தனர். அதில் புகழேந்திராஜா தற்கொலை செய்யும் முன்பாக அவர் கழுத்தில் தூக்கு மாட்டியவாறு புகைப்படம் எடுத்து காதலியின் தோழிக்கு அனுப்பியுள்ளார்.

அதை தோழி புகழேந்திராஜா விளையாட்டாக இதுபோன்று அனுப்பியுள்ளதாக நினைத்துள்ளார். ஆனால் அதுவிபரீதமாக முடிந்துவிட்டது. இந்த விவரம் அறிந்த புகழேந்திராஜாவின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர்.