சென்னையில் தல டோனிக்கு சொக்லேட் சிலை! எவ்வளவு எடை தெரியுமா?

79

சென்னையில் உள்ள சொக்லேட் நிறுவனம் தல டோனிக்கு சொக்லேட்டால் ஆன சிலை ஒன்றை உருவாக்கியுள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.இதில், இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

தல டோனிக்கு சொக்லேட்டால் செய்யப்பட்ட சிலை ஒன்றை சென்னையை சேர்ந்த சொக்லேட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.386 கிலோ கிராம் எடையில், 5 அடி 9 அங்குலத்தில் டோனியின் உருவத்தை சிலையாக உருவாக்கியுள்ளனர்.

இதற்கு அவர்களுக்கு 151 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.இந்த சிலையை அடுத்த மாதம் ஆர்.கே. சாலையில் உள்ள கஃபே அருகில் வைக்கயிருப்பதாக தெரியவந்துள்ளது.