சிறிய விடயத்தால் ஏற்பட்ட பிரச்சனை: ஒன்றாக உயிரை விட்ட இளம் தம்பதி!!

110

திருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பொலிசுக்கு பயந்து கணவரும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.தமிழ்நாட்டின் பழனியை சேர்ந்தவர் நடராஜ் (33). இவருக்கும் கவுதமி (22) என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தம்பதிக்கு நவனீஸ் என்ற 5 மாத ஆண் குழந்தை உள்ளது.கவுதமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தபோது அவருக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் தொடர்ந்து அவருக்கு கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.இது குறித்து கணவரிடம் அவர் அனுமதி கேட்க நடராஜ் அனுமதிக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த கவுதமி நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடராஜும் விஷத்தை குடித்து மயங்கினார்.இதற்கிடையில் அங்கு வந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இருவரும் இறந்தனர்.சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் கவுதமி விஷம் குடித்ததால் பொலிசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் நடராஜும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.