50 விமானங்கள், 1,000 சொகுசு கார்கள் : இன்று கோலாகலமாக தொடங்கியது அம்பானி மகளின் திருமண கொண்டாட்டம்!!

573

அம்பானியின் மகள் இஷா திருமணம்

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமோலுக்கும் டிசம்பர் 12 ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

திருமணத்திற்கு முன்னதா, திருமண சடங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் எல்லாம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது

உதய்பூர் மகாராணா பிரதாப் ஏர்போர்ட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிகப்படியான விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன.

உதய்பூர் விமான நிலையத்தில், மொத்தம் 200 விமானங்கள் லேண்ட் மற்றும் டேக் ஆஃப் ஆகப்போகின்றன. இவை அனைத்தும் ‘சார்ட்டட் பிளைட்ஸ்’ எனப்படும் சிறப்பு பயன் விமானங்கள் ஆகும்.

வீட்டு விசேஷம் நடைபெறவுள்ள இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் தலா 30-50 விமானங்கள் லேண்ட், டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதய்பூரில் உள்ள அனைத்து 5 நட்சத்திர விடுதிகளையும், அம்பானி குடும்பத்தினர் ஏற்கனவே புக் செய்து விட்டனர்.

அத்துடன் விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விருந்தினர்களை அழைத்து வரவும், மீண்டும் அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து செல்லவும் ஜாகுவார், பி.எம். டபிள்யூ, மெர்ஸிடெஸ் பென்ஸ், ஆடி கார்கள் மட்டும் 1, 000 சொகுசு கார்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

உதய்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், இஷா அம்பானி-ஆனந்த் பிரமோல் ஆகியோர் நேராக மும்பை வருகின்றனர். அங்கு வரும் டிசம்பர் 12ம் தேதி அவர்களின் திருமணம் விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இத்தாலியில் நடைபெற்ற நிச்சயதார்த்தம், உதய்பூர் மற்றும் மும்பையில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான மொத்த செலவு ஆயிரம் கோடிகளை தாண்டும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, உதய்பூர் விமான நிலையத்தில் குட்டி விமானங்கள் ஏறி இறங்கிக் கொண்டே இருக்கப் போகின்றன.

அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உள்ளிட்டோர் அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்கப் போகும் வெளிநாட்டு அரசியல் பிரபலங்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் என உதய்பூர் களைக்கட்டப் போகிறது.