இறந்தும் சிறுமி ஆஷிபாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? அடக்கம் செய்ய இடம் தர மறுத்த கிராமத்தினரால் அதிர்ச்சி!!

675

ஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபாவின் உடலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் ஆஷிபா என்ற சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஆஷிபாவுக்கு நீதிவேண்டும் என்று கூறி இந்தியா முழுவதும் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மகளுக்கு ஆஷிபா என்று பெயர் வைத்தது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.இந்நிலையில் சிறுமி ஆஷிபாவின் உடலை அவரது வளர்ப்பு தந்தை அங்கிருக்கும் கிராமத்தில் உள்ள துண்டு நிலத்தில் அடக்கம் செய்ய ஏற்பட செய்துள்ளார்.

ஏனெனில் கடந்த10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் மனைவி இறந்த போதும் அவர்களை அந்த இடத்தில் தான் புதைத்துள்ளார். அதன் காரணமாக அங்கே புதைக்க முடிவெடுத்துள்ளார்.ஆனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் சிறுமியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முஸ்லீம் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்தான் இங்கு அடக்கம் செய்ய அனுமதி என்று கூறி தடுத்ததால், அங்கிருந்து சுமார் 8 கி.மீற்றர் தொலைவில் உள்ள உறவினர் நிலத்தில் ஆஷிபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.அந்த நிலத்தின் ஒரு மூலையில் 5 அடியில் சிறுமி புதைக்கப்பட்டார். அதில் தலை, கால் பகுதிகளில் இரண்டு பெரிய கற்கள் அடையாளத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறுமியின் பாட்டி கூறுகையில், நாங்கள் சிறுமியை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தோம்.அப்போது அங்கு வந்த கிராம மக்கள் சிலர் நிலத்தின் ஆவணங்களைக் காட்டி இது எங்களுக்கு சொந்தமானது, உங்களுக்கானது இல்லை என்று கூறினர்.எங்கள் கையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி இருக்கிறாள். அதை அவர்கள் நினைத்து பார்க்காமல் இப்படி செயல்பட்டது மிகவும் வேதனையாக இருந்ததாக கூறியுள்ளார்.