ஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய் : கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி!!

731

காயத்ரி அருண்

பிரபல மலையாள தொகுப்பாளினி மற்றும் நடிகையான காயத்ரி அருண், தன்னிடம் பேசிய நபர், ஒர் இரவுக்கு 2 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதை பிரிண்ட் ஷார்ட் எடுத் பதிவிட்டுள்ளார்.

‘மலையாள ஆசியன் நெட் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் காயத்ரி அருண்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றிற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், மிகவும் ஆபாசமாக பேசியதோடு மட்டுமில்லாமல், ஓர் இரவுக்கு 2 லட்ச ரூபாய் தருகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியான காயத்ரி, உங்கள் அம்மா, தங்கை நலமாக இருக்க நான் கடவுளிடம் வேண்டுகிறேன் என பதில் அனுப்பி அனைவரது பாரட்டுகளையும் பெற்று வருகிறார்.