தந்தையால் கர்ப்பம் : கழிவறையில் குழந்தை பெற்ற 20 வயது பெண் : வழக்கில் அதிரடி திருப்பம்!!

1812

தந்தையால் கர்ப்பம்


El Salvador நாட்டில் மாற்றாந் தந்தையால் பல ஆண்டுகளாக சீரழிக்கப்பட்டு குழந்தை பெற்ற பெண்ணுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

இமில்டா கோர்ட்ஸ் (20) என்ற இளம் பெண்ணை அவர் மாற்றாந் தந்தை பல ஆண்டுகளாக சீரழித்த நிலையில் அவர் கர்ப்பமானார். இதையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கழிவறையில் இமில்டாவுக்கு குழந்தை பிறந்தது.

குழந்தையை இமில்டா அங்கேயே விட்டுவிட்ட நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அப்போது இமில்டா வேண்டுமென்றே கருக்கலைப்பு செய்து கொள்ள முயன்றார் என சந்தேகிப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

El Salvador நாட்டின் சட்டப்படி கருக்கலைப்பு என்பது மிக பெரிய குற்றமாகும். இதையடுத்து இமில்டாவின் குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது.

மருத்துவர்களின் சந்தேகத்தின் பேரில் பொலிசார் இமில்டாவை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிமன்றம் இமில்டாவுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து இமில்டாவின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதாவது இமில்டாவுக்கு தான் கர்ப்பமானதே தெரியாது எனவும், குழந்தையை கொல்ல அவர் முயலவில்லை எனவும் வாதாடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்கொண்ட நீதிமன்றம் இமில்டாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து திங்கட்கிழமை இமில்டா விடுதலையானார்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் இமில்டாவின் உறவினர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கூடியிருந்தனர். அப்போது இமில்டா மிகவும் உணர்ச்சிபூர்வமாக காணப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இமில்டாவின் மாற்றாந் தந்தை மீது நீதிமன்ற வழக்கு நடந்து வருகிறது.