மாயமான நிறைமாத கர்ப்பிணி : கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு வந்த அதிர்ச்சி செய்தி!!

1210

மாயமான நிறைமாத கர்ப்பிணி

சென்னை அரசு மருத்துவமனையில் மாயமான கர்ப்பிணி பெண், திருத்தணியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வயிற்றில் இருந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சுதாகர். இவரின் மனைவி காயத்ரி நிறைமாத கர்ப்பிணியான நிலையில் கடந்த 15ம் திகதி இரவு அரசு மருத்துவமனையில் சுதாகர் அனுமதித்தார். அப்போது காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள் 16 அல்லது 17ஆம் திகதி குழந்தை பிறந்துவிடும் என கூறினார்கள். இதையடுத்து, மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்துவிட்டு, அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதால் சுதாகர் இரவு வீடு திரும்பினார்.

மறுநாள் காலை, மனைவியை பார்க்க சுதாகர் வந்தபோது, பிரசவ வார்டில் மனைவி இல்லை என்றதும், அக்கம் பக்கத்தில் விசாரித்தார். அப்போது காயத்ரி நடைப்பயிற்சிக்கு சென்றிருப்பதாக கூறியுள்ளார்கள். உடனே இவர் மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்துள்ளார். மருத்துவமனை முழுவதும் காயத்ரியை காணவில்லை.

இதையடுத்து உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்களும் காயத்ரி இங்கு வரவில்லை என்றனர். இதையடுத்து மனைவியை காணவில்லை, என பொலிசில் சுதாகர் புகார் அளிதார். புகாரை பெற்ற பொலிசார் இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் காயத்ரி திருத்தணியில் உள்ளதாகவும், குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும் உறவினர்களுக்கு போன் வந்துள்ளது.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கு விரைந்துள்ளனர்.

திருவல்லிக்கேணி பொலிசார் திருத்தணி பொலிசாருக்கு தகவல் கொடுத்து அங்கு காயத்ரியை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவர்களும் திருத்தணி விரைந்துள்ளனர்.