குடிபோதையில் குழந்தையை தூக்கி தரையில் வீசிய தாய்மாமன் : கொடூர சம்பவம்!!

185

கொடூர சம்பவம்

திருச்சி மாவட்டத்தில் சொத்து பிரச்சினை காரணமாக சொந்த தங்கையின் குழந்தையை தரையில் தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷினி என்பவரின் ஒன்றரை வயது குழந்தை சாதனாவே இச்சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளார். குறித்த சம்பவம் அன்று சுபாஷினி தனது தந்தையை காண சென்றுள்ளார்.

இதன்போது சுபாஷினியின் அண்ணனான லோகநாதன் என்பவர் குடிபோதையில் சொத்து பிரச்சனை தொடர்பாக தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் குழந்தை சாதனாவை தூக்கி தரையில் வீசி தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் புகாரின் பேரில் லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.