அதீத காதல்.. ஓடும் பேருந்தில் திடீரென மயங்கிய பெண் பொலிஸ் : பயத்தில் அலறிய பயணிகள்!!

213

பெண் பொலிஸ்

சேலம் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் பெண் பொலிஸ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த செண்பகம்(26) என்ற இளம்பெண், திருச்சியில் பொலிஸாராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஜெயதேவன்(31) என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஜெயதேவன் வேலை விடயமாக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அங்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த செண்பகம், மனவேதனையில் ஓடும் பேருந்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அவர் திடீரென மயங்கி விழுவதை பார்த்து பயந்து போன பயணிகள் அலற ஆரம்பித்துள்ளனர். உடனடியாக பேருந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு செண்பகத்தை சிகிச்சைக்கு அனுமதித்தனர்.