இளம் மனைவியிடம் மிக மோசமாக நடந்து கொண்ட கணவன் : நேர்ந்த விபரீதம்!!

331

நேர்ந்த விபரீதம்

இந்தியாவில் கணவரின் தொடர் துன்புறுத்தல் காரணமாக இளம் பெண் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் நிர்மல் நகரை சேர்ந்தவர் உதய்கிரண். இவர் மனைவி சோனிகா. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் உதய்கிரணுக்கு திடீரென வேலை பறிபோயுள்ளது. இதோடு அவர் குடிபழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். இதையடுத்து மனைவியை சந்தேகப்பட தொடங்கிய உதய்கிரண் அவரை அடித்து உதைக்க தொடங்கினார்.

இந்நிலையில் கணவரின் தொல்லையால் தனது தாய் வீட்டுக்கு சென்ற சோனிகா, இரு தினங்களுக்கு முன்னர் உறவினரை பார்க்க அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஐந்தாவது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார் சோனிகா.

பின்னர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சோனிகா குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சோனிகாவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து உதய்கிரணின் துன்புறுத்தலால் தான் சோனிகா தற்கொலை செய்ததாக அவர் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.