திருமணமான பெண்ணின் மீது காதல் : வசியம் ஒழுங்காக வேலை செய்யாததால் ஜோதிடரை கொலை செய்தேன் : அதிர்ச்சி வாக்குமூலம்!!

830

அதிர்ச்சி வாக்குமூலம்

திருப்பூர் குமரன் சாலையில் கடந்த மாதம் கிளி ஜோதிடர் ரமேஷை, ஹெல்மட் அணிந்த நபரொருவர் சரிமாரியாக வெட்டிக் கொலை செய்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடரை கொலை செய்த ரகுவை தனிப்படை பொலிசார் தேடி வந்த நிலையில், சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.

இதையடுத்து, கடந்த 3-ம் தேதி ரகுவை 3 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ரகு அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, திருப்பூரில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்த ரகுவுக்கு, ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவரை வசியம் செய்வதற்காக கிளி ஜோதிடர் ரமேஷிடம் 50,000 ரூபாயை ரகு கொடுத்துள்ளார்.

இதனிடையே, அந்த பெண்ணுக்கு ரகு மீது காதல் ஏற்பட, வசியம் வேலை செய்ததாக நினைத்து அந்த பெண்ணுடன் ரகு, மயிலாடுதுறையில் வீடு எடுத்து தங்கியுள்ளார். நாளடைவில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்தப் பெண் தனது கணவருடனேயே சென்றுவிட்டார்.

இதையடுத்து, மீண்டும் கிளி ஜோதிடர் ரமேஷிடம் இரண்டரை லட்ச ரூபாய் கொடுத்து வசியம் வைக்க ரகு கேட்டுள்ளார். ஆனால், வசியம் வேலை செய்யாததால், மன உளைச்சலில் இருந்த ரகு, தென்னாப்ரிக்கா சென்று அங்கு ஒன்றறை லட்ச ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

எனினும் தனது காதலியின் நினைவு வாட்டவே ஒருமாதச் சம்பளம்கூட வாங்காமல் அங்கிருந்து மீண்டும் தமிழகம் வந்துள்ளார். திருச்சியில் பணியில் சேர்ந்த ரகு, அங்குள்ள வழிப்போக்கு ஜோதிடரிடம் தனது கதையை கூறியுள்ளார்.

அதற்கு அவர் முதலில் வசியம் செய்த ஜோதிடர் ரகுவை ஏமாற்றி விட்டதாகவும், அந்தப் பெண்ணிற்கு வேறு வசியம் வைத்து விட்டதாகவும் அதனால் தான் உனது காதலி உன்னை விட்டு சென்றுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகு, பணத்தையும் பெற்றுக் கொண்டு ஜோதிடர் தன்னை ஏமாற்றி விட்டதால் ஜோதிடரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி டிசம்பர் மாதம் 23ம் தேதி திருப்பூர் வந்த ரகு, ஜோதிடரை கண்காணித்துள்ளார். பின்னர் 24ம் தேதி மதியம் ஜோதிடர் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போதுதான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மூலம் ரமேஷை வெட்டி கொன்றதாகவும் அடையாளம் தெரியாமல் இருக்க ஹெல்மட் அணிந்து சென்று வெட்டியதாகவும் வாக்கு ரகு இப்போது மூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.