ஒரே நாளில் உலகப் பிரபலம் அடைந்த தண்ணீர் பெண் : எப்படி தெரியுமா?

124

தண்ணீர் பெண்

விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அமர்த்தப்பட்ட ஒரு சாதாரண பெண், ஒரே நாளில் பிரபலமாகியிருக்கிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மொடலான Kelleth Cuthbert, விருது வழங்கும் விழா ஒன்றில் பிரபலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அமர்த்தப்பட்டார்.

பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு வரும்போது அவர்களை ஒவ்வொருவராக புகைப்படம் எடுக்கும் வழக்கம் உண்டு. அந்த புகைப்படங்களில், பிரபலங்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போது, Kellethம் அவர்களுடன் போஸ் கொடுத்திருக்கிறார்.

சில படங்களில் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாலும், பல படங்களில் அவர் போஸ் கொடுப்பது நன்றாகவே தெரிகிறது. இந்த புகைப்படங்கள் வெளியானதும் ட்விட்டரில் ஏராளமானோர் Kellethஐ புகழ்ந்து தள்ள, ஒரே நாளில் உலகப் புகழ் பெற்று விட்டார் அவர்.

இந்த ஆண்டு பிரபலங்களில் என் ஃபேவரைட், அந்த தண்ணீர் வழங்கும் பெண்தான் என்று ஒருவர் ட்வீட்ட, இன்னொருவர், நிச்சயம் இந்த பெண்ணுக்கு சினிமா வய்ய்பு கிடைப்பதோடு, பல நடிகைகளை காணாமல் போகச் செய்யப்போகிறார் அவர் என்று ட்வீட்டியிருந்தார்.

தண்ணீர் வழங்குவதற்காக அமர்த்தப்பட்டாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் இந்த பெண் என பிரபல பத்திரிகை ஒன்றும் Kellethஐ பாராட்டியுள்ளது.