இறந்துபோன நபர் உயிருடன் வந்த அதிசயம்!!

129

அதிசய மனிதன்

அமெரிக்காவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்ட நபர் திடீரென உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்காட் மர் (60) என்ற நபருக்கு கடந்த மாதம் 12-ஆம் திகதி திடீரென பக்கவாத நோய் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

ஸ்காட்டுக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்ட நிலையில் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மூளையில் பெரியளவில் வீக்கம் ஏற்பட்டு ஸ்காட் அசைவற்று கிடந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறினர். அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாசத்தை அகற்ற முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து செயற்கை சுவாசம் அகற்றப்பட்ட பின்னரும் அவர் நன்றாக மூச்சு விடுவதை பார்த்து மருத்துவர்கள் வியந்தனர். இதன்பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஸ்காட் குணமடைந்தார்.

ஸ்காட்டின் இறுதிச்சடங்குக்கே தயாரான குடும்பத்தார் அவர் உயிர் பிழைத்ததை பார்த்து மிரண்டு போனார்கள், ஸ்காட்டை அதிசய மனிதன் என அவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்காட் மற்றும் குடும்பத்தினர் அனைத்து விடயங்களையும் கூறினார்கள். அப்போது மறுபிறவி எடுத்த ஸ்காட் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.