8 வயது குறைவான இளைஞருடன் தொடர்பு : கணவனை கொல்ல மனைவி நடத்திய நாடகம் : திடுக்கிடும் பின்னணி!!

218

மனைவி நடத்திய நாடகம்

இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் வசித்து வருபவர் நாகராஜ் (38). இவர் மனைவி மமதா (28). மமதா மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் பண்ணையார் ஒருவரின் மகனான பிரசாந்த் (20) என்பவர் தந்தைக்கு மருந்து வாங்க அடிக்கடி மருந்தகத்துக்கு வந்தார்.

அப்போது இருவருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இதை நாகராஜ் கண்டுப்பிடித்து மனைவி மமதாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மமதா கணவரை கொலை செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி அனில் பிஸ்வாஸ் (21) ஜாகீர் பாஷா (20) மற்றும் ஹரீஸ் குமார் (21) ஆகிய அடியாட்களிடம் மமதாவும், பிரசாந்தும் சேர்ந்து ஒன்றரை லட்சம் பணம் கொடுத்து நாகராஜை தீர்த்து கட்ட சொன்னார்கள்.

அதன்படி மமதாவும், நாகராஜும் வீட்டில் இருந்த போது மூவரும் அங்கு வந்தனர். பின்னர் நாகராஜை சரமாரியாக அடித்தனர். பின்னர் மமதாவையும் அடித்துவிட்டு அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பிடிங்கி சென்றனர்.

திருட்டு சம்பவத்தில் நாகராஜ் கொல்லப்பட்டார் என்பது போல ஊரை நம்ப வைக்க மமதா தான் இந்த திட்டத்தை தீட்டி கொடுத்தார். ஆனால் அந்த சமயம் பார்த்து தண்ணீர் கேன் போடும் மணி என்பவர் அங்கு வந்துள்ளார். அவரை பார்த்து பயந்து போன மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து காயமடைந்த நாகராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கு அடுத்தநாள் மமதா, பிரசாந்துடன் கோவாவுக்கு ஓட்டம் பிடித்தார். சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்த பொலிசார் கோவாவில் இருந்த இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாகராஜை கொல்ல முயன்ற மூவரையும் பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.