விபத்தில் சிக்கிய ராஜா ராணி சீரியல் நாயகன் : காதலனின் நிலையைக் கண்டு சோகத்தில் ஆல்யா!!

245

சோகத்தில் ஆல்யா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியல் மூலம் தற்போது இருவரும் உண்மையிலேயே காதலிக்கவும் துவங்கி விட்டனர்.

சமீப காலமாக இவர்கள் இருவரும் இணைந்து, பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து தங்களுடைய காதலை உறுதி செய்தனர். சஞ்சீவிற்காக ஆலியா, தன்னுடைய முதல் காதலர் சதீஷ் என்பவரை பிரேக் அப் செய்தார். ஆனால் சதீஷ் ஆலியாவின் நினைப்பில் சோகமாக பாட்டு கேட்காமல், வேறு ஒருபெண்ணை காதலித்து தற்போது நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சஞ்சீவ், கடைசியாக நியூஇயருக்கு வெளியூர் சென்ற புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் பலர் சஞ்சீவ்விடம் தொடர்ந்து, அவருக்கு மெசேஜ் அனுப்பி கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சஞ்சீவ் திடீர் என, ஒரு ட்விட் போட்டு அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளர். இதில் எல்லோருக்கும் வணக்கம், எந்த ஒரு பதிவும் இல்லாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

நான் விபத்தில் சிக்கியதால் எந்த பதிவும் போடமுடியவில்லை. கவலை வேண்டாம் விரைவில் குணம் அடைந்துவிடுவேன் என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்த விபத்தால் காதலரின் நிலையை கண்டு சோகத்தில் மூழ்கி உள்ளாராம் ஆலியா.