சிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் 8 மாத குழந்தை : விசாரணையில் சிக்கிய இளைஞர்கள்!!

270

சிறுமியின் வயிற்றில் இறந்த நிலையில் குழந்தை

தெலுங்கானா மாநிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பல மாதங்களாக துஸ்பிரயோகம் செய்து வந்த இளைஞர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் பாம்பாளி கிராமத்தை சேர்ந்த 24 வயதான கோட்டே ரஞ்சித் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

அதில் மயங்கிய அந்த சிறுமியி ரஞ்சித்திடம் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரஞ்சித், சிறுமியை தன்னுடைய நண்பர்கள் மெதுகு சதீஷ் (23), வ்யூகுந்தம் (24) ஆகியோருடன் சேர்ந்து 10 மாதங்களாக துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இதில் கர்ப்பமடைந்த சிறுமியை, அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வயிற்றுனுள் இறந்த நிலையில் 8 மாத குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பாலியல் பலாத்காரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை இன்னும் கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை.