ஒரு வருடமாக தலைக்கு குளிக்காமல் இருந்த இளம்பெண் : முடிவில் என்ன ஆனது தெரியுமா?

245

இளம்பெண்

ஷாம்புகள், ஹேர் டைகள் போன்ற பொருட்கள் இன்று தலை முடிக்கு அத்தியாவசியமாகிவிட்ட நிலையில் இது எதுவுமே உபயோகிக்காமல் ஒரு ஆண்டு இளம்பெண் இருந்த நிலையில் அவரின் தலைமுடிகள் பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் விர்ஜினியா டாப்ஸ்கோட் (28). இவர் கடந்த ஒரு வருடமாக ஷாம்புகள், ஹேர் டைகள், செயற்கை பொருட்கள் ஆகியவற்றை தலைக்கு பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரில் மட்டும் குளித்து வந்தார்.

விர்ஜினியாவுடன் அவரின் இரு குழந்தைகளும் இந்த முறையை பின்பற்றி வந்தனர். இதோடு மூவரும் கடந்த ஒரு வருடமாக தலைமுடியை வெட்டி கொள்ளாமல் இருந்தனர். இப்படி இருந்ததால் தங்கள் தலைமுடிகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விர்ஜினியா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், என் தலைமுடியில் தற்போது நல்ல வித்தியாசம் உள்ளது, அதாவது தலைமுடியாது அதிகம் உலராமலும், உடையாமலும் தற்போது உள்ளது. தற்போது என் முடியில் அடிக்கும் வாசம் தான் இயற்கையான தலைமுடியின் வாசமாகும். நடுநடுவில் சில இயற்கை பொருட்களை மட்டும் தலைக்கு பயன்படுத்தினேன்.

ரசாயனம் கலந்துள்ள ஷாம்புகள், ஹேர் டைகள் போன்றவற்றால் ஏற்படும் தீங்குகள் குறித்து நான் நன்றாக அறிவேன். அதனால் தான் என் குழந்தைகளுடன் சேர்ந்து இவ்வாறு செய்தேன். முன்பை விட தற்போது என் தலைமுடி பார்ப்பதற்கு பளபளப்பாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.