தீ வைத்து கொல்லப்பட்ட தாயார் மற்றும் மகள் : திருமண விவகாரத்தில் இளைஞரின் கொடுஞ்செயல்!!

71

இளைஞரின் கொடுஞ்செயல்

இந்திய மாநிலம் கேரளாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் மரணப்படுக்கையில் இருந்த யுவதியின் வாக்குமூலம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் 27 வயதான சோஜிபுல் மண்டல் என்ற இளைஞரே குறித்த கொலை வழக்கில் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

கேரளாவின் திருச்சூர் பகுதியில் மறைந்த முகம்மது என்பவரின் 55 வயதான மனைவி குஞ்ஞிப்பாத்து மற்றும் அவரது மகள் 15 வயதான சீனா என்பவர்களே தூக்கத்தில் இருக்கும்போது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து கொல்லப்பட்டவர்கள்.

கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த சோஜிபுல் அண்டை வீட்டில் குடியிருந்த சீனாவை தமக்கு திருமணம் செய்து தரும்படி கேட்டுள்ளார். இதற்கு தாயார் குஞ்ஞிப்பாத்து மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சோஜிபுல் இருவரையும் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.

2015 ஏப்ரல் மாதம் விடிகாலையில் கேரளாவை நடுக்கிய குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஞ்ஞிப்பாத்து மற்றும் மகள் சீனா ஆகியோர் தூக்கத்தில் இருந்த அறையில் கூரை ஓட்டைப் பிரித்து அதன் ஊடே இருவர் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார் சோஜிபுல்.

இருவரும் குடியிருப்பின் கதவை திறந்து வெளியேறாமல் இருக்கவும் ஏற்பட்டு செய்துவிட்டு குறித்த இளைஞர் நெருப்பு வைத்துள்ளதாக நிரூபணமானது. இதில் குஞ்ஞிப்பாத்துவின் உடல் சம்பவயிடத்திலேயே கரிக்கட்டையானது. ஆனால் குற்றுயிராக மீட்கப்பட்ட சீனா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு ஆறாவது நாள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதனிடையே நடந்த சம்பவங்களை மரண வாக்குமூலமாக அளித்த சீனா தமக்கு சோஜிபுல் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவம் நடந்த 5 மணி நேரத்திற்குள் சோஜிபுல் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்திற்கு தப்பிக்க இருந்த நிலையிலேயே சோஜிபுல் கைதானார்.