கள்ளக்காதல்… வறுமை.. கொலை : கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கோரத்தை வாக்குமூலமாக அளித்த குழந்தைகள்!!

273

வறுமை.. கொலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிள்ளைகளின் கண்முன்னே தாய் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழலை மொழியில் பேசும் குழந்தைகள் தங்களது தாய்க்கு நேர்ந்த கோரத்தை வாக்குமூலமாக அளித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் பிரச்சனையால் நடந்த கொலையில் இரண்டு குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர்.

எங்க அம்மாவ அரிவாளால் வெட்டினாங்க, எங்க சித்தி வந்து பிடிக்கும்போது கழுத்திலயும், கையிலயும் வெட்டினாங்க, எங்க அம்மாவுக்கு முதுகில் நான்கு வெட்டுக்குத்துகள் உள்ளன என்று குழந்தைகள் கூறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜிக்கு நேற்று சாலையில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சண்முகவேல் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், சண்முகராஜன் விஜியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த விஜியின் சகோதரிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

எதனால் இந்த சம்பவம் நடந்தது? : விஜிக்கும், அதே பகுதியை சேர்ந்த நாலாயிரம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. நாலாயிரத்திற்கு திருமணமாகிவிட்ட பிறகும் பழக்கம் தொடர்ந்தது. இதனால், விஜியும், நாலாயிரமும் திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர்.

திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வந்த காரணத்தால், நாலாயிரத்தின் தந்தை சண்முகவேலுக்கும் விஜிக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

கள்ளக்காதல் பிரச்சனையால் சண்முகவேல் தனது வீட்டையே வேறு பகுதிக்கு மாற்றியுள்ளார். இருப்பினும் நாலாயிரம் விஜியின் வீட்டிற்கு வருவதை நிறுத்தவில்லை. இதற்கிடையில், நாலாயிரம் அம்பையில் குடியேறிய நாலாயிரம் விஜியின் வீட்டுக்கு வருவதை நிறுத்திவிட்டார்.

வறுமையில் வாடிய விஜி, தனது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதால், நலாயிரத்தின் தந்தை சண்முகவேலிடம் சென்று உதவி கோரியுள்ளார். ஆத்திரம் அடைந்த சண்முகவேல் விஜியை நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்தம் அதிகமாக வெளியேறி விஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை செய்த சண்முகவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.