இரவில் என்னுடன் தங்குவார் : கணவர் அனுமதியோடு திட்டம் : அதிரவைத்த இளம்பெண்ணின் வாக்குமூலம்!!

1519

இளம்பெண்ணின் வாக்குமூலம்

சென்னையில் தங்கியிருந்த வடமாநில பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரைக் பணத்துக்காக கடத்தி வைத்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நொளம்பூரில் செயல்படும் கொரேனு என்ற நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த அமித்ராஜ் மேற்பார்வையாளராக உள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வில்லிவாக்கத்தில் கட்டுமான பணியை பார்வையிட சென்ற போது, 6 பேர் கும்பலால் காரில் கடத்தப்பட்டார்.

இது குறித்த விசாரணையின் போது, கடத்தப்பட்ட இடத்தில் சமையலராக இருந்த ஒடிசாவைச் சேர்ந்த ஜோஸ்னா என்ற இளம் பெண் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரது செல்போனை ஆராய்ந்த போது ஒடிசாவைச் சேர்ந்த திருலோட்சம் என்பவரிடம் வெகு நேரம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இருவரது உரையாடல்களும் ஆராயப்பட்டன. அப்போது அமித்ராஜ் எங்கிருக்கிறார் என்ற தகவலை திருலோட்சம் என்ற நபரிடம் ஜோஸ்னா கூறுவது பதிவாகி இருந்தது அம்பலமாகியுள்ளது.

இதை அடுத்து திருலோட்சமின் செல்போன் சமிஞ்சைகள் கண்காணிக்கப்பட்டன. இதற்கிடையில் கடத்தப்பட்ட அமித்ராஜின் வங்கி கணக்கில் இருந்து கடத்தல் கும்பல் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துள்ளனர்.

அந்த ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொள்ளையர்கள் விவரங்களை சேகரித்தனர். அதே வேளையில் செல்போன் சமிஞ்சை வளசரவாக்கத்தைக் காட்டியதால், பொலிசார் அங்கு விரைந்து ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அமித்ராஜை மீட்டனர். அவரைக் கடத்திய ஜோஸ்னா, திருலோட்சம் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக அமித் ராஜ் எப்போதும் பணம் வைத்திருப்பார் என்பதால் அவரைக் கடத்தி பறிக்க முயன்றதாகவும், ஆனால் கடத்தப்பட்ட போது அவரிடம் பணம் இல்லாததால், அவரது ஏடிஎம் அட்டையை வைத்து 30 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துள்ளனர்.

ஏடிஎம் மூலமாக அமித்ராஜின் கணக்கில் இருந்து நாளொன்றுக்கு 20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்பதால் ஒரு வாரமாவது வைத்திருந்து தவனை முறையில் ஏடிஎம் மூலம் பணம் பறிக்க திட்டமிட்டதாக கைதான கடத்தல் கும்பல் கூறியுள்ளனர்.

இதனிடையில் ஜோஸ்னா பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், வாரந்தோறும் சனிக்கிழமை ஐ.சி.எஃப் பகுதிக்கு வரும் அபிஜித் தாஸ் என் வீட்டில் தான் இரவு தங்குவார். அபிஜித் தாஸ் மேஸ்திரி என்பதால் எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் பணம் அதிகமாக இருந்ததால் அதை பறிக்க கணவருடன் சேர்ந்து திட்டமிட்டேன்.

இதற்காக என் கணவரும் காவலாளியுமான ராகேஷ் குமார் தாஸ் மற்றும் கட்டுமான நிறுவன சூப்பர்வைசர் திருலோச்சம், கட்டுமான தொழிலாளர்கள் அஸ்ஸாமைச் சேர்ந்த ஜமாலுதீன், பிட்டூ, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் திலகாம் ஆகியோரிடம் அபிஜித் தாஸை கடத்தும் திட்டத்தை கூறினேன். அவரைக் கடத்தி பணத்தைப் பறித்தால் ஆடம்பரமாக வாழலாம் என்றுதான் திட்டம்போட்டோம். ஆனால், சிக்கிக்கொண்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.