8 வருடம் ஆசையாக காதலித்த காதலி கிடைக்கவில்லை : கோபத்தில் காதலனின் வெறிச்செயல்!!

179

காதலனின் வெறிச்செயல்

டெல்லியில் 8 வருட காதல் ஒன்று சேராத காரணத்தால் மனம் உடைந்த காதலன், காதலியை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். நிஷாந்த் என்ற 24 வயது இளைஞர் ரம்யா என்பரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

வேலை மற்றும் வருமானம் இல்லாமல் இருக்கும் நிஷாந்தை வேலைக்கு செல்லுமாறு ரம்யா அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவரது வார்த்தைகளை கேட்காததால் ஆத்திரமடைந்த இளம்பெண், நிஷாந்தை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

பலமுறை நிஷாந்த் கெஞ்சி பார்த்துள்ளார். இதற்கு ரம்யா மறுத்துள்ளார். இந்நிலையில் கடைசியாக உன்னை சந்திக்க வேண்டும் என நிஷாந்த் கூறியுள்ளார்.

அப்பெண்ணிடம் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சியுள்ளார். எனினும் தன் முடிவில் உறுதியாக இருந்த பெண்ணை ஆத்திரத்தில் சுத்தியலால் பலமுறை அடித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். உண்மை கண்டறிந்ததையடுத்து நிஷாந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.