கால்கள் சென்னையில்.. உடல் ஆந்திராவில் : 20 மணிநேரம் கழித்து மீட்கப்பட்ட சடலம்!!

152

மீட்கப்பட்ட சடலம்

திருவள்ளூர் வாலிபர் ஒருவரின் கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் அவர் உடல் 20 மணி நேரத்திற்கு பின் ஆந்திர மாநில லாரி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் (28) இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். சுதாகர் காக்களூர் என்ற பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார்.

நேற்று முந்தினம் வேலை முடித்து வீடுதிரும்பாத சுதாகரை, காணவில்லை என்று பொலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர், தொடர்ந்து சுதாகரை தேடியதில் கால் மட்டும் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தனது பைக்கில் ஒரு லாரியை முந்தி செல்லும் போது எதிரே வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்ட பொலிசாருக்கு 20 மணி நேரத்திற்கு பின் ஒரு உடல் ஆந்திர மாநிலம் லாரியில் இருப்பதாக அம்மாநில பொலிசாரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அது சுதாகரின் உடல் தான் என்று பொலிசார் உறுதி செய்தனர், மேலும் விபத்தின் போது அவர் தூக்கி வீசப்பட்டு லாரியில் விழுந்ததும் தெரியவந்தது.