அழகால் மயக்கி கொலை செய்ததற்காக சிறை சென்ற இந்திய வம்சாவளிப்பெண் : இன்று பிரித்தானிய பிரபலம்!!

186

இந்திய வம்சாவளிப்பெண்

தன்மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்திய ஒரு நபரை ஆசை காட்டி தனது அறைக்கு வரச் செய்து, தன் மீது சபலம் கொண்ட ஒருவர் மற்றும் அவரது கூட்டாளியாகிய இன்னொரு நபரையும் விட்டு, தாக்கி கொலை செய்யச் செய்த ஒரு இந்திய வம்சாவளிப்பெண், பிரித்தானியாவில் மேயர் பதவிக்கு போட்டியிடும் ஒருவரின் மனைவியாக இருப்பதால் பிரபலமடைய உள்ளார்.

Mundill Mahil, சீக்கியரான Gagandip Singh (21) என்னும் தொலைக்காட்சி ஊழியர் ஒருவரை தன் அழகால் மயக்கி தனது அறைக்கு வரவழைத்தார்.

முன்பு தன்னை பாலியல் ரீதியாக தாக்கிய அவரை Mundill நயவஞ்சகமாக ஏமாற்றி வரவழைக்க, அவரது அறையில் மறைந்திருந்த Harvinder Shoker என்னும் சீக்கியரும், Darren Peters என்னும் நபரும் தலையில் அடித்து, மின்சார கேபிளால் கட்டி அவரது காரின் பின்பக்கத்திலேயே அடைத்து தீயிட்டுக் கொளுத்திக் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட Mundillக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டாலும், பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் லேபர் கட்சியில் வளர்ந்து வரும் அரசியல்வாதியான Varinder Singh Bola மணந்து கொண்டார் Mundill. Varinder Singh Bola தற்போது லண்டனிலுள்ள சிறு நகரம் ஒன்றில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

இதனால் கொலைக்குற்றத்திற்காக சிறை சென்ற அந்த பெண், ஒரு மேயரின் மனைவியாக மரியாதைக்குரிய ஒரு நபராக மாற இருக்கிறார்.