விஷால் காதலிக்கும் பெண் இவர்தான் : தீயாய் பரவும் புகைப்படம்!!

264

தீயாய் பரவும் புகைப்படம்

நடிகர் விஷால் அனிஷா ரெட்டி என்கிற ஆந்திர பெண்ணை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என ஒரு வாரத்திற்கு முன்பு தகவல் வெளியானது. அவரும் அதை சமீபத்திய பேட்டியில் உறுதி செய்தார்.

நேற்று அவர் தன் திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரப்படுவதாகவும், தானே விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஷால் காதலிக்கும் ஆந்திர பெண் இவர்தான் என கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த புகைப்படம் வழக்கம் போல வெறும் வதந்தி என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.