16 வயதில் பள்ளியை விட்டு வெளியேறிய பெண் : இன்று கோடீஸ்வரியான ஆச்சர்யம்!!

560

கோடீஸ்வரியான ஆச்சர்யம்

ஸ்காட்லாந்தில் 16 வயதில் பள்ளியில் விட்டு வெளியேறிய மாணவி தற்போது, வருடத்திற்கு £1 மில்லியன் வரை சம்பாதித்து அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்தவர் லிவ் கான்லான் (20). இவர் தன்னுடைய 16 வயதில், ஆசிரியரை சந்தித்து, படிப்பை நிறுத்திக்கொள்வதாக கூறியுள்ளார்.

அப்போது இதனை கேட்ட ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். அதற்கு பதிலாக நான் புதிதாக ஒரு தொழில் துவங்க போகிறேன் என கூறிவிட்டு, கான்லான் பள்ளியிலிருந்து நடையை கட்டியுள்ளார்.

அந்த இளம் தொழிலதிபர், சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து, ஆன்லைன் விற்பனை மூலம், முதல் வருடம் 5,000 பவுண்டுகள் சம்பாதித்து அசத்தியுள்ளார்.

அதன் பிறகு, ThePropertyStagers என ஒரு இணையதளத்தை துவங்கி அதில், எந்தவொரு நிதி ஆதாரமும் இல்லாமல் வெற்று வீடுகளை உருவாக்கி கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார். அதன் முதல் ஆண்டில் £ 30,000 பவுண்டுகள் என, இரண்டாவது ஆண்டில் £ 1 மில்லியன் பவுண்டுகள் வரை சம்பாதித்துள்ளார்.

கான்லான் தற்போது ஒரு வருடத்திற்கு 300 க்கும் அதிகமான வீடுகளை வாங்கி மெருகேற்றி வருகிறார். மேலும் அவருக்கு கீழ் 10 பேர் கொண்ட குழுவினர் வேலை செய்து வருகின்றனர். இதில் அவருடைய தாய் அலி (52) மற்றும் சகோதரர் ஜாக் (22) ஆகியோரும் அடங்குவர்.

இந்த வெற்றிக்கு பின்னால் நிச்சயமாக என்னுடைய தந்தையும், நம்பிக்கையாக லோன் கொடுத்த வங்கியுமே உள்ளது என கான்லான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.