கொல்ல வேண்டியது அவன இல்ல.. உன்ன தான்.. பிக்பாஸ் யாஷிகாவின் ஜோக்கை கேட்டு கொந்தளித்த நெட்டிசன்!!

631

யாஷிகா

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து மிகவும் மிகவும் பிரபலயமான நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, இவர் இந்த வருடம் நடத்தப்பட்ட தமிழ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் போட்டியில் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் கடி ஜோக்குகளை அள்ளி வீசி வந்த யாஷிகா ஆனந்த் தற்போது தனது சமூகவலைதள பக்கத்தில் மொக்க ஜோக் என்று ஓரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில், “என் செல்போன் கீழ போட்டு உடையல ஏன் தெரியுமா? ஏன்னா அது பிளைட் மோட்ல இருந்தது. அதனால கீழ விழாம பறந்துடுச்சு’ என ஜோக் கூறியுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் இந்த வீடியோவை உங்களது நண்பர்களுக்கு பகிர்ந்து அவர்களை கொல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், ரிப்ளை செய்த இளைஞர் ஒருவர் தேடிப் போய் கொல்ல வேண்டியது அவனை இல்ல.. உன்ன தான் என கமெண்ட் அடித்துள்ளார்.