தவறான முறையில் பிறந்த குழந்தை : 6 நாட்கள் மரணத்துடன் போராடிய சிறுமி…. இறுதியில் நடந்த சம்பவம்!!

568

மரணத்துடன் போராடிய சிறுமி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17 வயது மாணவி ஒருவர் திருமணமான ஆண் ஒருவரால் கர்ப்பமாக்கப்பட்டதையடுத்து மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 நாட்கள் போராடி வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமலா என்ற பெண்மணிக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். கணவர் குமார் பிரிந்துசென்றுவிட்டதால், ஒரு குழந்தையையும் மட்டும் கணவனுடன் அனுப்பிவைத்துவிட்டு மற்ற இரு பெண் குழந்தைகளையும் திருப்பூர் பனியன் கம்பெனியில் கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்.

இதில், முதல் மகள் ரம்யாவுக்கு 17 வயதாகியுள்ள நிலையில் தற்போது கல்லூரிக்கு சென்றுவருகிறார். தாத்தாவின் பாதுகாப்பில் கல்லூரிக்குச் சென்று வந்தார். பொங்கலுக்காக வீட்டுக்கு வந்த விமலா மகள்களுக்குத் தேவையான புதுத் துணியை எடுக்க ஊத்தங்கரை நகருக்கு வந்துள்ளனர்.

அப்போது ரம்யா திடீரென மயக்கம் போட்டு விழுந்து வலிப்பு வந்து துடிக்கவே, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்துள்ளார். ரம்யாவைப் பரிசோதித்த மருத்துவர், ரம்யா கர்ப்பமடைந்து குழந்தை முழு வளர்ச்சி அடைந்துள்ளதைத் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு தாய் விமலா அதிர்ச்சியடைந்துள்ளார். மருத்துவர்களோ, ரம்யாவின் உடலில் போதுமான பலம் இல்லை, வயிற்றில் குழந்தை வளர்வது உயிருக்கே ஆபத்தாகப் போய் முடியும் என்று எச்சரிக்கவும் அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

ஆனால், குழந்தை இறந்தே பிறந்துள்ளது. சுய நினைவை இழந்துள்ள ரம்யா கடந்த நான்கு நாள்களாகக் கண் விழிக்கவே இல்லை, கடந்த 6 நாட்களாகியும் கண்விழிக்காமல் மரணத்தின் விளிம்பில் போராடி வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழரசன் தன்னை மிரட்டி தவறான உறவு வைத்துக்கொண்டதையும் தெரிவித்துள்ளார். தமிழரசனுக்கு முன்பே திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாலியல் துன்புறுத்தல் செய்தல் மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.