3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் : இன்றய நிலையைக் கண்டு கட்டியணைத்து அழுத பெற்றோர்!!

478

கட்டியணைத்து அழுத பெற்றோர்

தமிழகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனைத் தேடி பெற்றோர் கடந்த 3 ஆண்டுகளாக தவித்து வந்த நிலையில், தற்போது அவர் பூரண குணமடைந்து மீண்டும் பெற்றோரிடம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அருணகிரி சத்திரம் மாதவராயர் பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதி சரவணன்-குமார். இந்த தம்பதிக்கு சிவக்குமார் என்ற ஒரு மகன் இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமாருக்கு திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டதால், பெற்றோர் தங்களுடைய வறுமையிலும், அவரை சிகிச்சைக்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகுமார் திடீரென காணாமல் போனார். இதனால் சிவக்குமார் மற்றும் குமாரி பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதனால் மகனை நினைத்து பெற்றோர் தவித்து வந்த நிலையில், ராமேஸ்வரத்தில் இயங்கிவரும் மனோலயா மனநலக் காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 2017-ஆம் ஆண்டு ராமேஸ்வரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த சிவகுமாரை மீட்டு தங்கள் காப்பாகத்தில் உரிய சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

சுமார் 15 மாதங்கள் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக சிவக்குமார் குணமடைந்தார். குணமடைந்த சிவக்குமார் தன்னுடைய பெற்றோர் மற்றும் ஊர் போன்றவைகளை கூற, உடனடியாக காப்பக நிர்வாகிகள், சிவக்குமார் கொடுத்த விவரங்களை வைத்து

மாநில குற்றப்பிரிவு ஆவணக் காப்பக ஆய்வாளர் தாஹீராவிடம் தெரிவித்துள்ளனர். அதன் பின் அவர்கள் தங்களிடம் காணமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நபர்களின் பட்டியலை ஆய்வு செய்த போது சிவக்குமார் பெயர் இருந்துள்ளது.

அவர் கூறிய விவரங்களும் சரியாக இருந்துள்ளது. அதன் பின்னர் இது குறித்து சிவக்குமாரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் ராமேஸ்வரத்திற்கு வந்து மகனைப் பார்த்து கட்டியணைத்து கண்ணீர்விட்டு, காப்பக நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லி அழைத்துச் சென்றனர்.