14 வருடம் கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

325

அதிரடி திருப்பம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 14 வருடம் கோமாவில் இருக்கும் பெண் திடீரென குழந்தை பெற்ற விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, ஆண் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 29 வயதான பெண் ஓருவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு, நீரில் மூழ்கியுள்ளார். இதனால் கோமா நிலைக்கு சென்ற பெண், பீனிக்ஸ் பகுதியில் உள்ள ஹேசியண்டா ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதியன்று திடீரென வயிற்றி வலியால் முனுக ஆரம்பித்துள்ளார்.

இதனை பார்த்த ஊழியர்கள் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளும்போது, ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவமானது அமெரிக்கா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் குழந்தையின் டி.என்.ஏ, மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும், நாதன் சதர்லேண்ட் (36) என்பவருடன் ஒத்துபோயுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், பாதிக்கப்பட்ட பெண்ணை துஸ்பிரயோகம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.