உங்கள் கையில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா? திருமண வாழ்கை இப்படி தான் இருக்குமாம்!!

2847

உங்கள் கையில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா?

ஜோதிட சாஸ்திரத்தில் கைரேகை சாஸ்திரம் அனைவரது வாழ்விலும் பெரும் பங்கு வகிக்கின்றது.ஒவ்வொரு ரேகையும் ஒருவரது வாழ்வை நிச்சயிக்கின்றது. கைரேகைகள் நம் எதிர்காலத்தை பற்றியும் குறிப்பது ஆகும்.

நமது மணவாழ்க்கை, ஆயுட்காலம், செல்வநிலை என அனைத்தும் நம் கைகளில்தான் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு அர்த்தமாகும்.

வாழ்க்கையின் தாக்கத்தை பொறுத்து மச்சங்கள் மெலிதாகவும், தெளிவாகவும் உங்கள் உடலில் இருக்கும். அவரவர் விதிகளுக்கு ஏற்ப மச்சத்தின் அளவும், இடமும் மாறுபடும் என்று கூறப்படுகிறது.

சாமுத்திரிகா இலட்சணத்தின் படி நீங்கள் பிறக்கும்போதே உங்கள் உடலில் அனைத்து மச்சங்களும் வந்துவிடும், உங்களுக்கு வயது அதிகமாக, அதிகமாகத்தான் அது வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

மச்சத்தை பற்றி பார்க்கும்போது,அது உடலில் இருக்கும் பாகத்தை பொறுத்து அது நமது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை பற்றி கூறுகிறது.

ஜோதிடத்தின் படி ஆண்களுக்கு வலது கையும், பெண்களுக்கு இடது கையும் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக உள்ளது. ஆனால் மச்சங்கள் கைகளில் இருக்கும் இடத்தின் பலன் இருவருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும்.

அந்தவகையில் கைகளில் எந்தெந்த இடங்களில் மச்சம் இருந்தால் உங்களுக்கு என்னென்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

வெள்ளி வளையம்

இந்த இடத்தில் மச்சம் இருந்தாலோ அல்லது திடீரென வந்தாலோ நீங்கள் விரைவில் தவறான பாதைக்கு செல்ல போகிறீர்கள் என்பதை உணர்த்தும்.

மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் நன்னெறி மற்றும் ஒழுக்க பாதையில் இருந்து விலகி தவறான பாதையில் செல்வீர்கள்.

நிலா மேடு

இந்த இடத்தில மச்சம் இருப்பது உங்களுக்கு தண்ணீரில் கண்டம் இருக்கிறது என்பதன் அறிகுறி ஆகும்.

இவர்கள் நிச்சயம் கிணறு, ஆறு, ஏரி போன்ற நீர் ஆதாரங்கள் இருக்கும் எந்த இடத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் செல்லக்கூடாது. மேலும் இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் நடக்கும்.

வியாழன் வளையம்

 

இது கடுமையான திருமண சகிப்புத்தன்மை மற்றும் தடைகளால் நிறைந்த வாழ்க்கை ஆகியவற்றின் அறிகுறியாகும்.

நீங்கள் எதையாவது சாதிக்க விரும்பினால் மற்றவர்கள் செய்யும் முயற்சிகளை விட நீங்கள் அதிகளவு முயற்சியை செய்ய வேண்டியிருக்கும். கடவுளால் மிகவும் சோதிக்கப்படப்போகிறவர் நீங்கள்.

சனி மேடு

இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் துர்பாக்கியசாலிகள். இவர்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் நடக்கும், அப்படி நடந்தாலும் அவர்களும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாது. தங்களது துணையை சமாளிப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள்.

சூரிய மேடு

மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பழியை சுமக்கும் துர்பாக்கியசாலிகள் நீங்கள்.இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களின் தனிப்பட்ட உருவகமும், மாண்பும் அவர்களை சுற்றியிருப்பவர்களின் செயல்களால் மோசமாக இருக்கும்.

உங்களை சுற்றியிருப்பவர்களால் நீங்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவீர்கள்.

புதன் மேடு

உங்களின் சுட்டு விரலுக்கு கீழே இருக்கும் இடம்தான் புதன் மேடு என்று அழைக்கப்படுகிறது, இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் திடீர் திடீரென இழப்புகளை சந்திப்பீர்கள்.அது பணநஷ்டமாகவும் இருக்கலாம், உறவு நஷ்டமாகவும் இருக்கலாம்.

வாழ்க்கை கோடு

உங்கள் வாழ்கை கோட்டின் மீது எந்த இடத்தில் மச்சம் இருந்தாலும் அது மிகவும் ஆபத்தானதாகும். வாழ்க்கை கோடு உங்கள் ஆயுளை குறித்தாலும் அதில் மச்சம் இருப்பது நல்ல அறிகுறி அல்ல.

இங்கு மச்சம் இருப்பவர்கள் கடுமையான நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, அதேசமயம் வாழ்க்கை முழுவதும் சிகிச்சை பெறவேண்டியும் நேரிடும்.

தலைமை வரி

தலைமை வரி என்பது உங்கள் தலையுடன் தொடர்பு கொண்டதென சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த இடத்தில் மச்சம் இருப்பது உங்களுக்கு தலை தொடர்பான வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதய கோடு

இதய கோட்டில் மச்சம் இருப்பது மிகவும் ஆபத்தான அறிகுறியாகும். ஏனெனில் இந்த இடத்தில் மச்சம் இருப்பது உங்களுக்கு அபாயகரமான பல நோய்கள் ஏற்படவாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட கோடு

அதிர்ஷ்ட கோட்டில் மச்சம் இருப்பது உங்களின் அதிர்ஷ்டத்தை பாதிக்கும் அடையாளமாகும். நீங்கள் எதிர்பார்க்கும் எதுவுமே உங்களுக்கே எளிதில் கிடைத்து விடாது. சிறிய வெற்றிக்கு கூட நீங்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியதாய் இருக்கும்.

திருமண கோடு

திருமண கோட்டில் மச்சம் இருப்பது உங்கள் திருமண வாழ்க்கையின் வீழ்ச்சியை குறிக்கும். இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் திடீரென்று எதிர்பாராத தருணங்களில் தங்கள் திருமண வாழ்க்கையில் வீழ்ச்சிகளையும், பிரச்சினைகளையும் சந்திப்பார்கள்.