நீங்கள் 8 மணி நேரத்திற்கும் குறைவாக துங்குபவரா? இளம் வயதிலே மரணம் நெருங்க வாய்ப்புள்ளதாம்!

568

மரணம் நெருங்க வாய்ப்பு

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தூக்கம் இன்றியமையாததாகும்.சராசரியாக ஒருவருக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியமாகும்.7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால் எப்படிப்பட்ட நோய்களும், அபாயங்களும் உங்களை தாக்கும்.

சரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் நமது உடலில் பாதிக்கப்படுவது எதிர்ப்பு சக்தி மண்டலம் தான். தூக்கம் இல்லாததால் எதிர்ப்பு சக்தி மண்டலம் வெளிப்படுத்த கூடிய cytokine என்கிற மூல பொருள் குறைந்து விடுகின்றது. இதனால் அடிக்கடி உடல்நல கோளாறுகளை தரும். மேலும் தொற்றுகளுக்கும் வழி வகுக்கும். அந்தவகையில் தூக்கம் இல்லையென்றால் நம் உடலில் எற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை பார்ப்போம்.

8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் உங்களுக்கு 45 சதவீதம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் அத்துடன் இதயத்தின் செயற்பாடும் சீராக இருக்காது.

8 மணி நேரம் குறைவாக குறைவாக தூக்கம் கொண்டோருக்கு உடல் எடை கூடும் மற்றும் சிலருக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்படும்.8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் ஞாபக சக்தி குறைய கூடும். 8 மணி நேரம் தூக்கம் சரியாக இல்லையென்றால் குளுக்கோஸ் உற்பத்தி தடை பட கூடும். இதனால் சர்க்கரை நோய் உங்களை எளிதாக பாதிக்க கூடும்.

யாரெல்லாம் 8 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டுள்ளனரோ அவர்களின் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்குமாம். 8 மணி நேரம் துக்கம் இல்லையேன்றால் தாம்பத்தியம் தடைபடுமாம்.
8 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்களோ அவர்களின் ஆயுள் குறையும் மற்றும் , மிக இளம் வயதிலே இவர்களை மரணம் நெருங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம். குறைவான நேரம் நாம் தூங்கினால் நமது தசை வளர்ச்சி குறைய கூடும். அத்துடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படுமாம்.

தூக்கம் குறைந்தால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். 8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் மன நல குறைபாடு ஏற்படும். 8 மணி நேரம் தூக்கம் குறைந்துவிட்டால் முக சுருக்கங்கள்,சரும பிரச்சினைகளும் இளமையான தோற்றத்தையும் குறைத்து விடுமாம்.