ஓடும் காரில் குழந்தை பெற்ற இளம் மனைவி : அதை உணராமல் கார் ஓட்டிய கணவன் : ஆச்சரிய சம்பவம்!!

314

ஆச்சரிய சம்பவம்

பிரித்தானியாவில் கர்ப்பிணி மனைவி கார் பின் சீட்டில் திடீரென குழந்தை பெற்றெடுத்த நிலையில், அதை உணராமலேயே கணவர் காரை ஓட்டி சென்றுள்ளார். Greater Manchester-ன் Bolton நகரை சேர்ந்தவர் விக் விஸ்தா. இவர் மனைவி சோனல் விஸ்தா.

கர்ப்பமாக இருந்த சோனல், தனது காரில் சென்று கொண்டிருந்தார். கார் பின் சீட்டில் அவர் உட்கார்ந்திருந்தார். அப்போது பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பெற்றார் சோனல். இதை உணராமலேயே காரை ஓட்டி சென்ற விஸ்தா பின்னரே மனைவி குழந்தை பெற்றதை உணர்ந்தார்.

இதன்பின்னர் தம்பதி மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தாய்க்கும் சேய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் நலமாக உள்ளனர். குழந்தை மூன்றரை கிலோ எடை உள்ளது.

இது குறித்து விஸ்தா கூறுகையில், குழந்தை பிறக்கும் போது எப்படி தைரியமாக வலி ஏற்படுவதை கையாள வேண்டும் என்பதை என் மனைவி வகுப்பு மூலம் கற்று கொண்டாள்.

இதோடு யோகா வகுப்புக்கும் சென்றோம், இது தான் சோனல் பிரசவத்தை தைரியமாக கையாள காரணம் என நினைக்கிறேன் என நினைக்கிறேன். எங்கள் காரை இனி விற்கக்கூடாது என இருக்கிறோம், ஏனென்றால் அதில் பிரசவ ஞாபங்கள் நிறைந்துள்ளன என கூறியுள்ளார்.