ஆண் நண்பருக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய பள்ளி மாணவி : பின்னர் காத்திருந்த பேரதிர்ச்சி!!

515

காத்திருந்த பேரதிர்ச்சி

பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் தனக்கு 14 வயதாக இருக்கும் போது நிர்வாண புகைப்படத்தை நபருக்கு அனுப்பியதால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேசியுள்ளார்.

Hampshire கவுண்டியை சேர்ந்தவர் மேகன் ஹிண்டன் (19). இவர் தற்போது Bournemouth பல்கலைக்கழகத்தில் multimedia journalism படிப்பை படித்து வருகிறார். 14 வயதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான அனுபவத்தை பற்றி ஹிண்டன் பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் அப்போது புதிய பள்ளியில் சேர்ந்தேன், பலரை எனது நண்பர்களாக ஏற்று கொண்டேன். சமூகவலைதளங்கள் மூலமும் பலரின் நட்பு கிடைத்தது. அப்படி என்னை விட சில வயது அதிகமான ஆண் ஒருவர் என்னிடம் சமூகவலைதளம் மூலம் பேசி வந்தார்.

அப்போது என்னுடைய நிர்வாண புகைப்படத்தை அனுப்ப கோரினார். நான் முடியாது என மறுத்தேன், ஆனால் எனக்கு அவர் அழுத்தம் கொடுத்து வந்தார். நான் தொடர்ந்து மறுத்த போதும் அவர் என்னை விடவில்லை.

பின்னர் என்னை மிரட்ட தொடங்கினார், இதனிடையில் ஆண் நண்பர்களுக்கு அதுபோன்ற புகைப்படங்களை அனுப்புவது தவறில்லை என என் தோழிகள் கூறினார்கள்.

இதையடுத்து என்னுடைய நிர்வாண புகைப்படத்தை அனுப்பினேன். புகைப்படத்தை அனுப்பிய 1 மணி நேரத்தில் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது என் புகைப்படத்தை கேட்டது ஒரு ஆண் கிடையாது பெண் என்பது எனக்கு தெரியவந்தது.

மேலும், அந்த பெண் என் புகைப்படத்தை பள்ளி முழுவதிலும் பலருக்கு அனுப்பியிருந்தார். இதையடுத்து நான் பள்ளிக்கு சென்றபோது எல்லோரும் என்னை கேலி, கிண்டல் செய்ததோடு என்னை ஒதுக்கினார்கள்.

அந்த பள்ளியில் படிக்கும் வரை நான் பல வேதனைகளை அனுபவித்தேன். எனக்கு ஏற்பட்ட பிரச்சனை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதால் தான் இதனை வெளியில் சொல்கிறேன். இதன்மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என கூறியுள்ளார்.

இதனிடையில் ஹிண்டனின் இந்த அனுபவத்தை வைத்து பொலிசார் ending Nudes: #ItHappenedToMe என்ற விழிப்புணர்வு குறும்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளம் மற்றும் இணையதளத்தை பெண்கள் பத்திரமாக கையாள வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.