என்னை காதலிக்க மாட்டியா? 17 வயது சிறுமியிடம் நடுரோட்டில் வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞன்!!

311

வெறிச்செயலில் ஈடுபட்ட இளைஞன்

இந்தியாவில் 17 வயது பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கத்தியால் பலமுறை குத்திய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபத்தை சேர்ந்த 17 வயது பெண் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் பரத் (19) என்ற இளைஞர் அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் காதலை அவரிடம் வெளிப்படுத்தினார்.

ஆனால் அப்பெண் பரத்தின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து அப்பெண்ணை பின் தொடர்ந்து சில மாதங்களாக பரத் தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து அப்பெண் பெற்றோரிடம் கூறிய நிலையில், பெற்றோர் பரத்தை அழைத்து அறிவுரை கூறி கவுன்சிலிங் கொடுத்தனர்.

ஆனாலும் அப்பெண்ணுக்கு தொல்லை கொடுப்பதை பரத் நிறுத்தவில்லை. பின்னர் பொலிசில் புகார் அளித்தும் பரத் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு கிளம்பிய பெண்ணை வழிமறித்து மீண்டும் காதலை சொன்னார் பரத்.

அவர் ஏற்காததால் ஆத்திரமடைந்த பரத் கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் பொலிசார் பரத்தை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.