பள்ளிக் குழந்தைகளின் உயிரில் விளையாடிய டிரைவர் : கியருக்கு பதில் மூங்கில் : அதிர்ச்சி வீடியோ!!

216

அதிர்ச்சி வீடியோ

இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து செல்லும் பேருந்தில், டிரைவர் கியரின் லிவர் பகுதி உடைந்துவிட்டதால், அவர் அதற்கு பதிலாக மூங்கில் கட்டையை வைத்து பேருந்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பிரபல தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளிக் குழந்தைகளுடன் கடந்த புதன் கிழமை பள்ளிக்கு சென்றுள்ளது. அப்போது பேருந்தின் டிரைவர் ராஜ்குமார் என்பவர் முன்னே சென்ற விலையுயர்ந்த BMW காரின் மீது மோதியுள்ளார்.

இதனால் அந்த காரிலிருந்த தொழிலதிபர் உடனடியாக காரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பேருந்து நிற்காமல் சென்றதால், பேருந்தை விரட்டிச் சென்று பிடித்து, அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார், பேருந்தின் உள்ளே சென்று பார்த்த போது, பேருந்தின் கியரில் இருக்கும் லிவர் பகுதியில் மூங்கில் கட்டை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு கியரின் லிவர் உடைந்துள்ளதால், இதனால் அவர் மூங்கில் கட்டையை வைத்தே பேருந்தை இயக்கி வந்துள்ளார்.

பேருந்தின் உள்ளே பள்ளிக் குழந்தைகள் இருந்தும், அவர்களின் உயிரைப் பற்றி சற்றும் நினைக்காமல், அவர்கள் உயிரில் விளையாடியுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின் டிரைவர் தற்போது பெயிலில் வந்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.